- இந்தியா
- தென் ஆப்பிரிக்கா
- ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை
- கோலாம்பூர்
- சாம்பியன் கோப்பை
- ஜூனியர் டி20 உலகக் கோ
- தின மலர்
கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. ஜூனியர் டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி இன்று பகல் 12 மணிக்கு கோலாலம்பூரில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில் கொங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழந்த நிலையில் 11.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கொங்கடி த்ரிஷா 44 ரன்களும், சானிகா சால்கே 26 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஜூனியர் டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
The post ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாம்பியன்!! appeared first on Dinakaran.

