×

சென்னை மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அண்ணா மிதிவண்டி போட்டி, சென்னை சுவாமி சிவானந்தா சாலையில், 6 பிரிவுகளாக நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த போட்டி, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் தொடங்கி, நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் வரை நடைபெற்றது.

இந்த போட்டிகளில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளும், 15 வயதிற்குப்பட்ட மாணவ, மாணவிகளும் மற்றும் 17 வயதிற்குப்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். 2024-25ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற 60 நபர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 5000, இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 3000, மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 2000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வந்தவர்களுக்கு ரூ. 250 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அலுவலர் ஆண்டனி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) இப்ராஹிம், மண்டல அலுவலர் பரிதா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai District Level Anna Bicycle Competition ,Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Anna Bicycle Competition ,Perarignar Anna ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா