- கூடலூர்
- நேதாஜி
- சுபாஷ் சந்திர போஸ் உண்டு விரிவுரை பள்ளி
- அரசு தொழிற்பயிற்சி நிறுவனம்
- உப்பட்டி, பந்தலூர் தாலுகா
கூடலூர், பிப்.1: கூடலூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உரைவிட பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்காக பந்தலூர் தாலுகா உப்பட்டியில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தொழிற்பிரிவுகள் வேலை வாய்ப்புகள் போன்றவற்றை அக்கல்வி நிலையத்தின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக தெரிந்து கொண்டனர்.
தொடர்ந்து நாடுகாணியில் உள்ள தாவர மரபியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் வனத்தின் முக்கியத்துவம்.
உன் வனவளத்தை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பல்வேறு அரிய வகை மூலிகை தாவரங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் அறிந்து கொண்டனர். வனச்சரக அலுவலர் வீரமணி பழங்குடி இன மாணவர்களிடம் கலந்துரையாடினார். கல்வி சுற்றுலாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம், தலைமை ஆசிரியர் சுரேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
The post பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.
