- மதுரை
- சி.தினேஷ் குமார்
- மதுரை கார்ப்பரேஷன்
- சித்ரா விஜயன்
- தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம்
- மதுரை, சங்கீதா
- தின மலர்
மதுரை, பிப். 1: மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சி.தினேஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் நிறுவனத்தில் இணை தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மதுரையில், கலெக்டராக சங்கீதா, மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஆர்டிஓவாக ஷாலினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மோனிகா ராணா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மீனாட்சியின் ஆட்சி நடப்பதாக நம்பிக்கை உள்ள மதுரையில், மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய தலைமை பதவிகள் பெண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
The post மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம் appeared first on Dinakaran.
