×

தேவகோட்டை அருகே சாலை விரிவாக்க பணிகள் ஜரூர்

தேவகோட்டை, பிப். 1: தேவகோட்டை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமாிப்புத் துறை சார்பில் தேவகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டையிலிருந்து கோவிந்தமங்களம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பிடாரனேந்தல், புதுக்குறிச்சி, வாடிநன்னியூர், கோவிந்தமங்களம், தூணுகுடி உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் சாலையை விரிவுபடுத்தக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையையேற்று செவ்வாய்பேட்டையிலிருந்து கோவிந்தமங்களம் செல்லும் சாலையில் தேவகோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி 3.75 மீ அகலம் கொண்ட இந்த சாலையை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.5 மீ அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணி, சிறுபாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தேவகோட்டை அருகே சாலை விரிவாக்க பணிகள் ஜரூர் appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Devakottai Highways Construction (M) Parampara Department ,Chevvaipettai ,Govindamangalam ,Pidaranendal ,Pudukkurichi ,Vadinanniyur ,Thoonugudi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை