×

தாசில்தார் வீட்டில் 11 மணிநேரம் ரெய்டு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி சாலையில் குடியிருப்பவர் முத்துசாமி. இவர் வருவாய் துறையில் உதவியாளராக சேர்ந்து பணி உயர்வு பெற்று ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு முதல் பழநி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா(45). அரசு பள்ளி ஆசிரியை.

இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து. நேற்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை சுமார் 11 மணி நேரம் தாசில்தார் முத்துச்சாமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

The post தாசில்தார் வீட்டில் 11 மணிநேரம் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Raid ,Tahsildar ,Ottanchathiram ,Muthuswamy ,Naganampatti Road, Ottanchathiram, Dindigul district ,Revenue Department ,Ottanchathiram Tahsildar ,Palani Kottaakshi ,
× RELATED 11 கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல்..!!