×

ஐகோர்ட் நீதிபதிகளின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட 2 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீன்


ஐதராபாத்: ஐகோர்ட் நீதிபதிகளின் செல்போவை ஒட்டுக்கேட்ட 2 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளாஜ ஏசி புஜங்க ராவ், ஓய்வுபெற்ற டிசி ராதாகிஷன் ராவ் ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் செல்போன், தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தெலங்கானா சிறையில் கடந்த ஓராண்டாக அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இரவரும் ஜாமீன் கோரி கடந்த ஓராண்டாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு காத்துள்ளனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே. சுஜானா, ‘இரு விசாரணை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் முழு விசாரணைகள் நடத்தி முடிக்க காலதாமதம் ஆகும் என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பல நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு மற்றும் அவர்களின் விபரங்களை டைப் செய்து தயாரித்துள்ளனர் என்பது தெலங்கானா அரசு தாக்கல் செய்த சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஐகோர்ட் நீதிபதிகளின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட 2 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Telangana High Court ,Court ,AC ,Bhujanga Rao ,DC ,Radhakishan Rao ,High Court ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு