×

கோடைக்கு முன்னதாகவே பூத்துள்ள பிளேம் ஆப் பாரஸ்ட் பூக்கள்

வால்பாறை : வால்பாறை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்தது. தொடர்ந்து, தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் புற்கள் தாவரங்கள் பசுமை இழந்து காய்ந்து வருகிறது. நீர் நிலைகளில் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இந்நிலையில், வறட்சியை பிரதிபலிக்கும் வகையில், பிளேம் ஆப் பாரஸ்ட் பூக்கள் மலர்ந்துள்ளன.

இவைகள் கோடைக்கு முன்னதாக பூத்துள்ளதால் வறட்சியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வனத்துறையினர் மற்றும் தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘இந்த பூக்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தீ ஜுவாலை எரிவது போன்ற காட்சி தருவதால் பிளேம் ஆப் பாரஸ்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவைகள் கோடைக்கு முன்னதாக பூத்துள்ளதால் வறட்சியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வறட்சியை தவிர்க்க கோடை மழையை எதிர்பார்த்து உள்ளோம்’’ என்றனர்.

The post கோடைக்கு முன்னதாகவே பூத்துள்ள பிளேம் ஆப் பாரஸ்ட் பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Valparai ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...