திண்டுக்கல்: தேசிய சாலை பாதுகாப்பு மாத வார விழா ஜனவரி 1 டூ 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு எஸ்பி பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் நகர் ஏஎஸ்பி சிபின் மேற்பார்வையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் டூவீலர்களில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர்களுக்கு மரக்கன்று வழங்கி உற்சாகப்படுத்தினர். மேலும் டூவீலரில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து இனி தலைக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
The post திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று appeared first on Dinakaran.
