×

பெரியாரை விமர்சித்து பேசுவோர் அயோத்திதாச பண்டிதரை விமர்சிக்க முடியுமா? திருமாவளவன் கேள்வி

மணப்பாறை: பெரியாரை விமர்சித்து பேசுவோர், அயோத்திதாச பண்டிதரை விமர்சிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சி மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆதி திராவிடர் நலப்பேரவை வெள்ளி விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. விசிக தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் பேசியதாவது: இன்றைக்கு சில பேர், தமிழ் தேசியம் என்ற பெயரால், திராவிடம் என்ற சொல்லே கூடாது என்றும், அதை சொன்னவர் பெரியார் என்றும், பெரியாரை வீழ்த்தியே தீருவோம் என்ற மதவாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சொல்லை விமர்சிக்க வேண்டும் என்றால் அவர்கள் அயோத்திதாச பண்டிதரை தான் விமர்சிக்க வேண்டும். அது இவர்களால் முடியாது. அது மிகவும் ஆபத்தானது. பாஜவினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூட பெரியாரை எதிர்ப்பார்கள், ஆனால் அம்பேத்கரை எதிர்க்க மாட்டார்கள். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்து மக்களுக்கும் கூட எதிரான கட்சி பாஜ. ஒரு சாதிய தலைவனாக என்னை எல்லோரும் அடையாளப்படுத்திய போது, என்னை தமிழ் மக்களுக்கான தலைவனாக அடையாளப்படுத்தியது பிரபாகரன். இவ்வாறு அவர் பேசினார்.

* இது ஆமை கதை அல்ல
திருமாவளவன் பேசும்போது, தேசியத் தலைவர் பிரபாகரனுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, தனது இலையில் இருந்த வறுத்த கோழியை, எனது இலையில் எடுத்து வைத்தார். அப்போது, நான் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன் என்று சொன்னேன். என்ன சைவ சிறுத்தை ஆகிவிட்டது என்று பிரபாகரன் என்னை பார்த்து சொன்னார். இது ஆமை கதை அல்ல. இதற்கு இப்போதும் 2 பேர் சாட்சிகளாக இருக்கிறார்கள் என்றார்.

The post பெரியாரை விமர்சித்து பேசுவோர் அயோத்திதாச பண்டிதரை விமர்சிக்க முடியுமா? திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Periyar ,Ayothidasa Pandit ,Thirumavalavan ,Manapparai ,Adi ,Dravidar ,Welfare ,Association ,Silver Jubilee ,Trichy ,Vishika ,Chidambaram… ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...