- அமித் ஷா
- சென்னை
- மகாத்மா காந்தி
- 78 வது நினைவு நாள்
- ஜனாதிபதி
- தமிழ்நாடு காங்கிரஸ்
- மத்திய உள்துறை அமைச்சர்
சென்னை: மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமிஷ்தாவை கண்டித்து காங்கிரசார் நாளை கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏனென்றால் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அமித்ஷாவை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.
