- திருவள்ளூர்
- குமரேசன்
- சிங்கப்பள்ளி கிராமம்
- வந்தவாசி தாலுகா,
- திருவண்ணாமலை மாவட்டம்
- கே.கே.நகர், மணவாளநகர்
- வயலூர்
- தின மலர்

திருவள்ளூர்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, சிங்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (27). இவர் கடந்த 3 ஆண்டுகளாக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கே.கே. நகரில் தங்கி வயலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் குமரேசன் தன் அறையில் தங்கி இருந்தார். அப்போது இவரது நண்பர்கள் அனைவரும் வெளியே சென்ற நேரத்தில் இவர் வீட்டின் கதவை உட்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுக்கையறையில் டவலால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
