×

முதல்வரை வரவேற்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் பறக்கும் திமுக கொடிகள்

கன்னியாகுமரி, டிச.30: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி, 31ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 1ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கண்ணாடி இழை கூண்டுபாலத்தை திறந்து வைக்கிறார். இதற்காக முதலமைச்சர் இன்று குமரிக்கு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதல்வரை வரவேற்று கன்னியாகுமரி கடலில் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த கொடிகள் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை உள்ள கடல் பகுதிகளில் மிதவைகள் மூலம் கடலில் பறக்க விடப்பட்டுள்ளன. இது குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

The post முதல்வரை வரவேற்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் பறக்கும் திமுக கொடிகள் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kanyakumari ,Chief Minister ,Thiruvalluvar statue ,Tamil Nadu ,M.K. Stalin ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை