×

பெரம்பலூர் மாவட்ட அளவில் தேர்வான 68 சிறந்த ஜூனியர், 27 கவுன்சிலர்களுக்கு விருது

பெரம்பலூர், ஜன.30: பெரம்பலூர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப் பட்ட 68சிறந்த ஜூனியர்கள் மற்றும் 27 சிறந்த கவுன்சிலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் முருகம்மாள் விருதுகள் வழங்ககிப் பாராட்டினார். பெரம்பலூர் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில், சிறந்த ஜூனியர் களுக்கு மற்றும் கவுன் சிலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, பெரம்ப லூர்- துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் மாவட்ட சாரண,சாரணியர் கூட்ட அரங்கில் நேற்று (29ஆம் தேதி) மாலை 2.30 மணி யளவில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடை நிலை) செல்வக்குமார் தலைமை வகித்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் கலந்துகொண்டு, பெரம்ப லூர் மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட சிறந்த ஜூனியர்களுக்கு மற்றும் கவுன்சிலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றி னார்.இதன்படி பெரம்பலூர் மாவட்டஅளவில் தேர்வு செய்யப்பட்ட 68-சிறந்த ஜூனியர்கள் மற்றும் 27 கவுன்சிலர்களுக்கு விருது கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டக் கல்விஅலுவலர் (தொடக்க க்கல்வி) அய்யாசாமி, இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்டச் செய லாளர் இராதாகிருஷ்ணன், இலாடபுரம் அரசு ஆதிதிரா விடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பெரம்பலூர் வட்டாரக் கல்விஅலுவலர் ஜோதி லட்சுமி வாழ்த்துரை வழங் கினார். மாவட்டக் கன்வீனர் ஜோதிவேல் ஆண்டறிக்கை வாசித்தார். இணைக் கன் வீனர்கள் கிருஷ்ணராஜ், துரை, ரகுநாதன், மண்டல அலுவலர்கள் செல்வராஜ், காசி ராஜா, பூவேந்தஅரசு செல்வ சிகாமணி, தேவேந் திரன், கயல்விழி, ஜெயக் குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்த னர். முன்னதாக அமைப் பின் மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். இணைக்கன்வீனர் இராஜா நன்றி கூறினார்.

The post பெரம்பலூர் மாவட்ட அளவில் தேர்வான 68 சிறந்த ஜூனியர், 27 கவுன்சிலர்களுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District Principal Education Officer ,Murugammal ,Perambalur District Junior Red Cross ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...