- Kilpennathur
- சென்னை, விழுப்புரம்
- சமாஜ்வாடி
- ராமகிருஷ்ணன்
- கார்த்திகேயன்
- மதுரா சாலையூர்
- சிறுநாதூர்
- திருவண்ணாமலை மாவட்டம்
- விழுப்புரம்
- தின மலர்
கீழ்பென்னாத்தூர், ஜன. 30: கீழ்பென்னத்தூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் மதுரா சாலையூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கார்த்திகேயன்(33), இ-சேவை மையம் நடத்தி வந்த இவர், ரியல் எஸ்ேடட் தொழிலும் செய்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு மர்ம கும்பல் வீடு புகுந்து கார்த்திகேயனை சரமாரியாக வெட்டிக்கொன்றது குறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க கூடுதல் எஸ்பி சதீஷ்குமார் மேற்பார்வையில் திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, சிவசங்கர், கீழ்பென்னத்தூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படை போலீசார் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
The post வாலிபர் கொலை வழக்கில் 3 தனிப்படை விசாரணை சென்னை, விழுப்புரம் விரைந்தனர் கீழ்பென்னாத்தூர் அருகே நடந்த appeared first on Dinakaran.
