
ஜாம்ஷெட்பூர்: ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் எலைட் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் களம் கண்டுள்ளன. அதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு இதுவரை விளையாடிய 6 லீக் ஆட்டங்களில் தலா 3 வெற்றி, டிராக்களை சந்தித்துள்ளது.
அதனால் 25 புள்ளிகளுடன் டி பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு டிரா செய்தாலோ வெற்றி பெற்றாலோ காலிறுதிக்கு எளிதில் முன்னேறி விடும். ஒரு வேளை தோற்றாலும் தமிழ்நாட்டின் காலிறுதி வாய்ப்பு பாதிக்காது.
The post ரஞ்சி கோப்பை கடைசி சுற்றில் ஜார்கண்ட் அணியுடன் தமிழ்நாடு மோதல் appeared first on Dinakaran.
