×

சீனாவில் பாம்பு ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டம்

பீஜிங்: சீனப் புத்தாண்டு இன்று கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், அடுத்து வரும் 15 நாட்கள் வரை இந்த புத்தாண்டை மக்கள் கொண்டாட உள்ளனர். உலகம் முழுவதும் வாழும் சீன மக்கள், வசந்த விழாவாகக் கொண்டாடும் சீனப் புத்தாண்டை வரவேற்றனர். முக்கிய நகரங்களின் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமங்களில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படும் நிலையில், புதிய ஆண்டு பாம்பு ஆண்டாக கருதப்படுகிறது.

சீன தலைநகர் பீஜிங், வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலங்கள் மற்றும் சீனாவின் அனைத்து நகரங்களிலும், 15 நாட்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சீன சந்திர நாட்காட்டியின்படி, இந்தாண்டிற்கான சீனப் புத்தாண்டு அல்லது சந்திரப் புத்தாண்டு பாம்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கும் சீன புத்தாண்டின் தொடக்கம் வரும் 16 நாட்கள் வரை வசந்த விழாவாக கொண்டாடப்படும்.

The post சீனாவில் பாம்பு ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Chinese New Year ,Spring Festival ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி