×

அமெரிக்காவில் அரசு ஊழியர்களுக்கு 7 மாத ஊதியத்துடன் விருப்ப ஓய்வு வழங்கும் திட்டம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஊழியர்களுக்கு 7 மாத ஊதியத்துடன் விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் வகையில், ஊதிய பலன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அரசின் மனிதவள நிறுவனமான பணியாளர் மேலாண்மை அலுவலகம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. அதில், விருப்ப ஓய்வு திட்டட்தை ஏற்றுக்கொள்ள, வரும் பிப்ரவரி 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, செப்டம்பர் 30ம் தேதி வரை 7 மாத காலத்திற்கு ஊதியம் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அனைத்து நேரடி பணி தேவைகளில் இருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் அரசு ஊழியர்களுக்கு 7 மாத ஊதியத்துடன் விருப்ப ஓய்வு வழங்கும் திட்டம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : United States ,President Trump ,Washington ,President Donald Trump ,47th ,President of ,Donald Trump ,Republican Party ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...