×

தமிழக காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு பெற்றது

சென்னை: தமிழக காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இணைய குற்றங்கள் மற்றும் நிதிசார்ந்த இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் இணையவழி குற்றப்பிரிவால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில் பள்ளிகள், கல்லூரிகள், பொது மக்கள், தேசிய காடட் கார்ப்ஸ், நாட்டி நலப்பணித்திட்டம் போன்றவற்றில் இருந்து சுமார் 5000 பேர் பங்கேற்றனர்.

1930 விழிப்புணர்வு நடைபயணம் வளர்ந்துவரும் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காக பிரத்தியேகமான முயற்சியாகும். சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதும் தாமதமின்றி சைபர் கரைம் உதவி எண் 1930-ஐத் தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நடைபயணத்தில் அனைத்து தரப்பிலிருந்தும் சுமார் 5000 நபர்கல் சேப்பாக்கம் உள் விளையாட்டு அரங்கம் / வாலாஜா சாலை (மாநில விருந்தினர் மாளிகை முன் புறம்) முதல் சுவாமி சிவானந்தா சாலை வரையிலான 1930 மீட்டர் (உதவி எண்ணைக் குறிக்கும்) தூரத்தை கலந்து கொண்டுகடந்தனர். இணையவழிக் குற்றப்பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப்மித்தல், நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கினார். காவல்துறை தலைமை இயக்குந ர்/ படைத்தலைவர் சங்கர்ஜிவால், 1930 விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்வை குறித்த தலைமை உரையை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து. 1930 நடைபயணத்தினை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் சிறப்புரையாற்றி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் அவர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டி. விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பாதுகாப்பான இணையவெளியை ஊக்குவிப்பதிலும் இந்த விழிப்புணர்வு முயற்சிகள் முக்கிய பங்குவகிக்கின்றன என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பல புதிய துவக்கங்கள் இடம் பெற்றன. அதில் ஒன்றான 1930 சைபர்கிரைம் உதவி எண் கட்டுப்பாட்டு அறையின் விரிவாக்கம் ஆகும். இது சைபர்குற்றங்களைப் புகாரளிக்கவும். சரியான நேரத்தில் உதவியைப் பெறவும் மற்றும் சைபர் அச்சுருதல்களில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் உதவியாக அமையும்.

மற்றுமொரு முன்னெடுப்புகளில் ஒன்று. கார்ட்டூன் தொடரான ‘சைபர்குற்றங்களும் தம்பியின் வழிகாட்டலும்’ என்ற புத்தகத்தை வெளியிடுவதாகும். இந்த புத்தகம் குறிப்பிடத்தக்க 30 சைபர்குற்றங்களும் அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. இந்த கார்ட்டூன் புத்தகத்தை கீழேகொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பதிவிறக்கம்செய்யலாம்.

மேலும் இந்த ஆகச் சிறந்த நிகழ்வில் காவல்துறை தலைவரின் விழிப்புணர்வு குறும்படமும் மற்றும் பிரபல திரைப்பட நடிகர் திரு கார்த்திசிவகுமார் அவர்களின் விழிப்புணர்வு குறும்படமும் வெளியிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்விற்கு மதிப்பு சேர்த்த ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், பங்கேற்பாளர்களுக்கு பிளாக் செயின் சான்றிதழ்களை வழங்குவதாகும்.

இந்த நிகழ்வால் உருவாக்கப்பட்ட உத்வேகமானது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. இந்த 1930 உதவி எண் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதை இலக்காகக் கொண்ட இந்த நடைபயணத்தின் வெற்றியை இது பிரதிபலிக்கிறது.

“சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்”, இந்தியாவில் சைபர்குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் மிகப் பெரிய மக்கள் திரளை ஒன்றிணைத்தற்காக லண்டனின் உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக நுழைவதை எண்ணி தமிழக காவல்துறை பெருமை கொள்கிறது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்ற்றவர்களுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் இது பெருமையினை சேர்க்கும் தருணமாகும்.

The post தமிழக காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு பெற்றது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police ,1930 Awareness Walk ,Chennai ,awaited ,Tamil Nadu Cyber Crime Wing ,-awaited ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...