×

17 வயது சிறுமி கர்ப்பம் இன்ஜினியர் மீது போக்சோ பாய்ந்தது

சங்ககிரி, ஜன.29: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவைச் சேர்ந்தவர் குமரவேல் (27), பி.இ.பட்டதாரி. இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் குமரவேல் சிறுமியை கடந்த வருடம் அக்டோபர் 7ம் தேதி அழைத்துச் சென்று முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனால் சிறுமியை குமரவேல் பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், நேற்று, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் கார்த்திகேயினி, எஸ்ஐ மல்லிகா ஆகியோர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக குமரவேல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 17 வயது சிறுமி கர்ப்பம் இன்ஜினியர் மீது போக்சோ பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Kumaravel ,Idappadi taluka ,Salem district ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்