×

வாக்காளர் தின போட்டி: வேதாரண்யம் மாணவிக்கு கவர்னர் பரிசு

வேதாரண்யம், ஜன.29: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தை சேர்ந்த இளங்கோவன் – பானுமதி தம்பதியினரின் மகள் பவியா. இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 76வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேசிய வாக்காளர் தின போட்டியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை பேட்டி, வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டார்.

இதில் வேதாரண்யம் மாணவி பவியா 2ம் இடம் பெற்றார். அவருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சான்றும், பரிசும் வழங்கினார். மாநில அளவில் 90 கல்லூரிகள் பங்கு பெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற வேதாரண்யம் மாணவியை கிராம மக்கள் பாராட்டினர்.

The post வாக்காளர் தின போட்டி: வேதாரண்யம் மாணவிக்கு கவர்னர் பரிசு appeared first on Dinakaran.

Tags : Voters' Day Competition ,Vedaranyam ,Bhaviya ,Ilangovan ,Bhanumathi ,Ayakaranpulam ,Vedaranyam taluka, Nagapattinam district ,Chennai ,National Voters' Day Competition ,76th Republic Day ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...