×

அரசியல் உள்நோக்கம் கொண்டது நில முறைகேடு வழக்கில் நீதி கிடைக்கும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடமிருந்து கையகப்படுத்திய 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நிலத்தை விற்ற தேவராஜு ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இதற்கிடையே, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், மூடா வழக்கு விசாரணை குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வளவு அவசரம் ஏன் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இது அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்ட குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு. நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

The post அரசியல் உள்நோக்கம் கொண்டது நில முறைகேடு வழக்கில் நீதி கிடைக்கும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister Siddaramaiah Hopchai ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Parvati ,Mallikarjun Sami ,Siddaramaiah Hopchai ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது