×

அதிபர் டிரம்ப் உத்தரவு எதிரொலி மெக்சிகோ வளைகுடா அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம்: கூகுள் மேப்ஸ் திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க புவியியல் பெயர்கள் குறித்து அரசு அதிகாரப்பூர்வ பட்டியலை புதுப்பிக்கும்போது தான் மெக்சிகோ வளைகூடாவானது அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றப்படும் என கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றார். இதனைதொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் தெற்கு பகுதி, மெக்சிகோ மற்றும் கியூபாவின் எல்லையில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்வதாக அதிபர் அறிவித்தார். மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான டெனாலியின் பெயரை மவுன்ட் மெக்கின்லி என்று பெயர் மாற்றுவதற்கும் அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கூகுள் தனது எக்ஸ் தளத்தில்,‘‘அதிகாரப்பூர்வ அரசு பட்டியல்களில் அரசின் பெயர் மாற்றங்கள் புதுப்பிக்கப்படும்போது மட்டுமே நாங்களும் அதனை பயன்படுத்துவதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். எனவே அரசு பட்டியல்களில் நீர்நிலைகள் மற்றும் மலைகளின் பெயர்கள் புதுப்பிக்கப்படும்போது நிறுவனமும் அந்த மாற்றங்களை செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளது.

The post அதிபர் டிரம்ப் உத்தரவு எதிரொலி மெக்சிகோ வளைகுடா அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம்: கூகுள் மேப்ஸ் திட்டம் appeared first on Dinakaran.

Tags : PRESIDENT TRUMP ,GULF OF MEXICO ,US ,Washington ,Gulf of America ,Donald Trump ,president ,United States ,U.S. Gulf ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்!!