×

ஜார்க்கண்டில் மிரட்டி பணம் பறிப்பு மாவோயிஸ்டுடன் தொடர்புடைய அமைப்பின் தலைவரை அடித்து கொன்ற மக்கள்: 4 பேர் படுகாயம்

லதேஹர்: ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டம் சந்த்வா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பாரி கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடைய தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் சங்கர்ஷ் முக்தி மோர்ச்சே என்ற அமைப்பின் தலைவர் கிஷோர் என்ற அபய் நாயக் மற்றும் ஏழு பேர் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த கிராம மக்களிடம் பணம் தரும்படி மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஜேஎஸ்எம்எம் தலைவர் கிஷோர் உள்பட ஏழு பேரையும் கிராம மக்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கிஷோர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஜார்க்கண்டில் மிரட்டி பணம் பறிப்பு மாவோயிஸ்டுடன் தொடர்புடைய அமைப்பின் தலைவரை அடித்து கொன்ற மக்கள்: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Maoist ,Jharkhand ,Latehar ,Bari ,Chandwa ,Latehar district ,Kishore ,Sankarsh ,Mukti ,Morcha ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...