×

ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்

ரூர்கேலா: முதலாவது மகளிர் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் முதலாவது மகளிர் ஹாக்கி இந்தியா லீக் போட்டிகளில் 4 அணிகள் மோதி வந்தன. இந்த தொடரில் அணிகள் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் சூர்மா கிளப் – ஒடிசா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் இறுதிப் போட்டி நடந்தது. ஒடிசா வாரியர்ஸ் அணியின் ருதுஜா பிஸல் அற்புதமாக ஆடி அந்த அணிக்காக 2 கோல்களை அடித்து அசத்தினார். சூர்மா கிளப் வீராங்கனை பென்னி ஒரு கோல் அடித்தார். அதன் பின் கோல் விழாததால், 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக ருதுஜா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து, ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் சாம்பியன் பட்டம் ஒடிசா அணிக்கு வழங்கப்பட்டது.

The post ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Hockey India League Tournament Odisha Warriors ,Rourkela ,Odisha Warriors ,women's ,Hockey India League Tournament ,Rourkela, Odisha ,Dinakaran ,
× RELATED உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது...