- கரூர் மாநகராட்சி
- கரூர்
- மேயர்
- கவிதா கணேசன்
- ஆணையாளர்
- கே.எம்.சுதா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
கரூர், ஜன. 29: கரூர் மாநகராட்சி பகுதியில் மேயர் கவிதா கணேசன் ஆணையர் கே எம் சுதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரதிவிகளுக்கு நேரடியாக பகுதிகளுக்குச் சென்று அடிப்படை திட்டப் பணி மற்றும் அத்தியாவசிய பணிகள் பூர்த்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதேபோல் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களின் கோரிக்கையை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அறிவுறுத்தி வருகிறார். இதன் இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சி-மண்டலம்-2, 32வது வார்டு பகுதிகளில் மேயர் கவிதா கணேசன், ஆணையர் கே எம் சுதா, மண்டலத் தலைவர் அன்பரசன்,
மாநகர மத்திய பகுதிகழக பொறுப்பாளர் விஜிஎஸ் குமார், 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிவேதா, மாநகர் நல அலுவலர் டாக்டர் கௌரி சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் மார்ட்டின், உதவி பொறியாளர்கள் மாரிமுத்து, வார்டு செயலாளர் ஆர்.எஸ்.அன்புரத்தினம், அவை தலைவர் கே.வி.தங்கவேல், இளைஞர் அணி அமர்ஜோதி பாலாஜி, மாநகராட்சி பணியாளர்கள், கழகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பணிகள் ஆய்வு செய்யும் பொழுது பொதுமக்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
The post கரூர் மாநகராட்சி வார்டுகளில் மேயர்-ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.
