×

சாலையோரம் நின்றிருந்த போலீஸ் வேன் மீது சுற்றுலா வேன் மோதி பெண் உள்பட 17 பேர் காயம்

விழுப்புரம், ஜன. 29: விழுப்புரம் அருகே சாலையோரம் நின்றிருந்த போலீஸ் வேன் மீது சுற்றுலா வேன் மோதி பெண் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். சென்னை ஆவடியை சேர்ந்த தயாளன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இருவரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்னை ஆவடி நோக்கி சுற்றுலா வேனில் சென்றனர். பாலாஜி என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். ஜானகிபுரம் புறவழிச்சாலையில் வந்தபோது சாலையோரம் நின்ற போலீஸ் வேன் மீது சுற்றுலா வேன் மோதியது.

இதில் வேனில் தயாளன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தயாளன் அளித்த புகாரின்பேரில் சுற்றுலா வேன் ஓட்டுநர் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோரம் நின்றிருந்த போலீஸ் வேன் மீது சுற்றுலா வேன் மோதி பெண் உள்பட 17 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Dayalan ,Avadi, Chennai ,Uma Maheshwari ,Trichy… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை