- குடியரசு தின மிதவை அணிவகுப்பு
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
- எவர்வின் பள்ளி
- குயின் மேரி கல்லூரி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குடியரசு தினம்…
- இளைஞர் நலன் மற்றும்
- விளையாட்டு மேம்பாட்டுத் துறை

* எவர்வின் பள்ளிக்கும், ராணி மேரி கல்லூரிக்கும் முதல் பரிசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர்க்கும், 2ம் பரிசு பெற்ற மயிலாப்பூர் சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவியர்க்கும், 3ம் பரிசு பெற்ற அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்க்கும் கேடயங்களை வழங்கினார்.
கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற ராணி மேரி கல்லூரி மாணவியர்க்கும், 2ம் பரிசு பெற்ற கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர்க்கும், 3ம் பரிசு பெற்ற குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் கல்லூரி மாணவியர்க்கும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், முதல் பரிசு பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
2ம் பரிசு பெற்ற காவல் துறையின் சார்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை கூடுதல் ஆணையர் என். கண்ணன் ஆகியோருக்கும், 3ம் பரிசு பெற்ற இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இணை ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கும் முதல்வர் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post குடியரசு தின அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.
