×

பொன்னமராவதி அருகே அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா

பொன்னமராவதி,ஜன.28: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்மன்றம் நடத்திய தமிழ் கூடல் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் வள்ளியப்பன் தலைமை வகித்தார்.

மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சுந்தர் வெற்றிக்கொடி கட்டு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முதுகலை தமிழாசிரியர் பாக்கியராஜ் வரவேற்றார். முடிவில் தமிழாசிரியர் பிரபாவதி நன்றி கூறினார்.

The post பொன்னமராவதி அருகே அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா appeared first on Dinakaran.

Tags : Tamil gathering ceremony ,Ponnamaravathi ,Sadayampatti Government Higher Secondary School ,Tamil ,Pudukkottai district ,Muthamizh ,Arignar ,Dr. Kalaignar ,Tamil Mandram ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை