×

பெரியார் குறித்து ஆதாரமற்ற கருத்து: சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு

கரூர், ஜன. 28: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் தங்கவேலு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்ட தோழர் களம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி 8ம்தேதி கடலூரில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

தந்தை பெரியார் குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்காக, அவரை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அநாகரீகமான பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். தேர்தல் விளம்பரத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும், மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் சீமான் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பெரியார் குறித்து ஆதாரமற்ற கருத்து: சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Seeman ,Karur ,Collector ,Thangavelu ,Public Grievance Day ,Karur District Collectorate ,District Collector ,Thangavelu… ,Dinakaran ,
× RELATED கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சித்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்