×

கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

பென்னாகரம், ஜன.28: பென்னாகரம் அருகே ஆணைக்கல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(37). முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவர், இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த பொங்கல் அன்று புதிதாக கார் வாங்கி உள்ளார். அந்த காரை தனது இ-சேவை மையத்தின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, இ-சேவை மையத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சியடித்து தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இது குறித்து சரவணன் பென்னாகரம் போலீஸ் ஸ்ேடஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் தீப்பிடித்து எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Saravanan ,Anaikallanur ,Panchayat Council ,Pongal ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை