×

கல்குவாரி நீரில் மூழ்கி 2 மகளுடன் தாய் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையம் வாசிங் நகரை சேர்ந்தவர் ராஜா (36). இவரது மனைவி ரேவதி (33), மகள்கள் பிரகன்யா (7), பிரகாஷினி (9). நேற்று ரேவதி, அவரது 2 மகள்கள் மற்றும் அருகில் வசிக்கும் தீபா, ரிதன்யா, ரித்திகா என 6 பேர் வீட்டின் அருகில் உள்ள கல்குவாரியில் தேங்கிய நீரில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது நீரில் விளையாடிக் கொண்டிருந்த பிரகன்யா, பிரகாஷினி ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். அவர்களை மீட்க ரேவதி உள்பட மற்றவர்கள் நீரில் இறங்கினர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து தீபா, ரித்திகா மற்றும் ரிதன்யா ஆகியோரை மீட்டனர். ரேவதி, பிரகன்யா, பிரகாஷினி ஆகியோரை தீயணைப்பு படையினர் வந்து சடலங்களாக மீட்டனர். சிறுமி பிரகன்யாவை தேடும் பணி நடக்கிறது.

The post கல்குவாரி நீரில் மூழ்கி 2 மகளுடன் தாய் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Raja ,63 ,Velampalayam Vasing Nagar ,Palladam ,Tiruppur district ,Revathi ,Praganya ,Prakashini ,Deepa ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...