- குடியரசு தினம்
- செங்குன்ராம் பொலிஸ்
- இன்ஸ்பெக்டர்
- புருஷோத்தமன்
- செங்குன்ராம்
- 76 வது குடியரசு தினம்
- கண்ணம்பாளையம்
- விளாங்காடுபாக்கம் ஊராட்சி
- செங்குன்ராம்...

புழல்: செங்குன்றம் அருகே 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்ற பெண்களுக்கு செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் பரிசு வழங்கினார். செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் கிராமத்தில் உள்ள இளம் மலர்கள் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு கோலப் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் இசை நிகழ்ச்சி கண்ணம்பாளையம் பெருமாள் கோயில் தெருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கண்ணம்பாளையம் பாரதி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு அப்பு, ராஜேஷ், ரவி, மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி, இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வடகரை திராவிட டில்லி, ஜெயக்குமார், நாகராஜ், சரத்குமார், வெங்கடேசன், சிகாமணி, கிராம பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வென்ற பெண்களுக்கு பரிசு appeared first on Dinakaran.
