கமல்ஹாசன் தயாரிப்பில் ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ேஜாடியாக நடிக்கும் சாய் பல்லவி, சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவம் குறித்து கூறுகையில், ‘நான் 7ம் வகுப்பு படிக்கும்போது, மாணவன் ஒருவனை எனக்கு மிகவும் பிடித்தது. அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த விஷயத்தை அவனுக்கு தெரிவிக்க காதல் கடிதம் எழுதினேன். அதை அவனுக்கு எப்படிக் கொடுப்பது என்று தெரியாமல் புத்தகத்தில் மறைத்து வைத்தேன். எதிர்பாராமல் அக்கடிதம் என் அம்மாவுக்கு தெரிந்து, என்மீது அவருக்கு அளவு கடந்த கோபம் ஏற்பட்டது.
என்னைக் கடுமையாக திட்டி அடித்துவிட்டார். அவர் என்னை அடித்தது அதுதான் முதல்முறையும், கடைசிமுறையும் ஆகும். இன்று வரை மீண்டும் என் அம்மாவுக்கு கோபத்தை வரவழைக்கும் எந்த தவறையும் நான் செய்யவில்லை. நம்மை எவ்வளவு அன்புடன் கவனித்து நிலவைக்காட்டி சோறூட்டிய தாயாக இருந்தாலும், அவரது கையில் அடி வாங்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். குழந்தையை நல்வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு ஹீரோதான்’ என்றார்.
The post சாய் பல்லவி மறைத்த காதல் கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.