×

அஜித்துக்கு பத்மபூஷண் நடிகர் சங்கம் வாழ்த்து

சென்னை: பத்மபூஷண் விருது பெறும் நடிகர் அஜித் குமாருக்கும் நடிகை ஷோபனாவுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்து, அரியதொரு போட்டியில் உலக வரைபடத்தில் தன் பெயரை பொன்னேட்டில் பதித்த நண்பர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் கவுரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது. அதேபோல் நடனத்தாலும் தனது நடிப்பாலும் ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகை ஷோபனாவுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post அஜித்துக்கு பத்மபூஷண் நடிகர் சங்கம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Nadigar Sangam ,Chennai ,South Indian Actors' Association ,Ajith Kumar ,Shobana ,
× RELATED பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க...