- மனுநீதி
- நாள் முகாம்
- செங்கல்பட்டு
- மனு
- நீதி நாள் முகாம்
- மதுராந்தகம் தாலுக்கா
- மாவட்டம்
- கலெக்டர்
- அருண்ராஜ்
- தினம்
- முகாம்
செங்கல்பட்டு, ஜன.26: மதுராந்தகம் வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் மதுராந்தகம் வட்டத்தில் எல்.எண்டத்தூர் குறுவட்டம், வெள்ளப்புத்தூர் கிராமத்தில் வரும் 29ம் தேதி (புதன் கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
The post மனுநீதி நாள் முகாம் appeared first on Dinakaran.
