×

லால்குடியில் ₹1.82 கோடியில் பத்திர பதிவு அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரம்

*எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் ஆய்வு

லால்குடி : லால்குடியில் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் பத்திர பதிவு அலுவலத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் ஆய்வு கொண்டார்.
திருச்சி மா வட்டம், லால்குடியில் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் பத்திர பதிவு துறை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பத்திரப்பதிவுத்துறை அலுவலகக் கட்டுமான பணிகளை எம்எல்ஏ செளந்தர பாண்டியன் பார்வையிட்டு, அதிகாரிகள், ஒப்பந்தகாரரிடம் பணிகள் குறித்தும் பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரக்கூடிய சாலை வசதிகள், அலுவலகத்திற்கு வருகிறவர்களுக்கு காத்திருப்பு அறைகள், கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர்ஜான் டி.ரோஸ், லால்குடி சார்பதிவு அலுலவர் மஞ்சுளா மற்றும் ஒப்பந்தகாரர் உடனிருந்தனர்.

The post லால்குடியில் ₹1.82 கோடியில் பத்திர பதிவு அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : registry ,Lalgudi ,MLA Soundarabandian ,Bond Registry Office ,Trichy Ma Circle, Lalgudi ,Dinakaran ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...