×

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

தஞ்சாவூர், ஜன.24: நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) மனோஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) மனோஜ்குமார் கூறியதாவது: திருவையாறு வட்டார சம்பா சாகுபடி நெல் வயல்களில் தற்போது நெற்பயிர்களில் புகையான் மற்றும் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது. புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு இமிடா குளோபிரிட் 100 மில்லியு டன் அசார்டிடாக்டின் 250 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சன்ன ரகங்களில் குலைநோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு டிரை சைக்ளோ சோல் 120 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து நோய்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thiruvaiyaru ,Assistant Director of Agriculture ,Manoj Kumar ,Thiruvaiyaru district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை