×

ஆட்டோ டிரைவரை வெட்டிய 4 பேர் கைது

எட்டயபுரம், ஜன. 24: கோவில்பட்டி வேலாயுதபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜ் (42). ஆட்டோ டிரைவரான இவரிடம், கடந்த 20 நாட்களுக்கு முன்பு இதே தெருவை சேர்ந்த பாலமுருகன் மது குடிக்க பணம் கேட்டதாகவும், விஜயராஜ் மறுத்து பாலமுருகனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் நேற்று பாலமுருகன் மகன் ராம்குமார் (25), இவரது நண்பர்கள் கோவில்பட்டி கருணாநிதி நகரை சேர்ந்த மாதவன் (20), மாரிக்கனி (19), சுடலைமணி (32) ஆகியோர் விஜயராஜ் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விஜயராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து ராம்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

The post ஆட்டோ டிரைவரை வெட்டிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Vijayaraj ,2nd Street, Velayudhapuram, Kovilpatti ,Balamurugan ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...