×

ஜல்கான் ரயில் விபத்து பலி 13 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டம் பட்னேரா ரயில் நிலையம் அருகே நேற்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் தீப்பொறி பறந்தது. உடனே பயணி ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ரயிலில் இருந்து மற்ற பயணிகள் அவசர அவசரமாக இறங்கினர். அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் உடமைகளுடன் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ், தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. இதில் 8 பேர் உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

தற்போது பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ‘ஹாட் ஆக்சில்’ அல்லது ‘பிரேக்-பைண்டிங்’ காரணமாக தீப்பொறிகள் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன்.

பலியானோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்துள்ளார்.

The post ஜல்கான் ரயில் விபத்து பலி 13 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Jalgaon train accident ,Modi ,New Delhi ,Mumbai ,Lucknow ,Uttar Pradesh ,Patnera railway station ,Jalgaon district ,Maharashtra ,Jalgaon train ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...