×

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியில் சேர வாய்ப்பு

மதுரை, ஜன. 23: இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு தேர்வில் தகுதியுள்ளோர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவ உதவியாளர் பணிக்கு ஜன.29ல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் தேர்வு நடைபெறுகிறது. இதில், 12ம் வகுப்பில் அறிவியியல் பிரிவில் தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்கள் (3.7.2004 முதல் 3.7.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்) கலந்துகொள்ளலாம். மருந்தாளுநர் பணிக்கு பி.எஸ்சி பார்மா / பார்மசி டிப்ளமோ முடித்த 3.7.2001 முதல் 3.7.2006க்குள் பிறந்த திருமணமாகாத ஆண்களும், 3.7.2001 முதல் 3.7.2004க்குள் பிறந்த திருமணமான ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படை அக்னிவீர் தேர்விற்கு, 1.1.2005 முதல் 1.7.2008க்குள் பிறந்த திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி பிளஸ் 2 அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தேர்வு குறித்த விபரங்களை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியில் சேர வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Madurai ,Agniveer Vayu ,Maharajas College Grounds ,Ernakulam, Kerala ,Dinakaran ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ