×

கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

மங்கலம்பேட்டை, ஜன. 23: விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் முத்து தலைமையிலான மண்டல பறக்கும் படையினர், மங்கலம்பேட்டை அருகே உள்ள பாலக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்வதற்காக நிறுத்தினர். டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர், அதிகாரிகளைக் கண்டதும், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்ததில், சுமார் 3 யூனிட் அளவிற்கு கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள், அந்த டிப்பர் லாரியை ஆலடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, கொடுத்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mangalampet ,Zonal Flying Squad ,Villupuram Zonal Geology and Mines ,Assistant Director ,Muthu ,Palakollai Government Primary Health Centre ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை