×

உறுப்பினர் நியமனம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 23: தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில மேம்பாட்டு மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் உறுப்பினராக, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்டான்லி முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேம்பாட்டு செயல்திட்டம் தொடர்பான கொள்கை மீது, அரசுக்கு ஆலோசனை வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு திட்டமிடுதல், நடவடிக்கை எடுத்தல், மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல், திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணித்தல், வழிகாட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, இதன் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

The post உறுப்பினர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Pappireddipatti ,Tamil Nadu State Development Forum for Adi Dravidians and Tribals ,Chief Minister ,Tamil ,Nadu ,Stanley Murugesan ,Pappireddipatti, Dharmapuri district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை