×

திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்புத்தூர், ஜன. 22: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது.  திருப்புத்தூர் சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர், ஸ்ரீ யோக பைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, நேற்று மதியம் ஸ்ரீ யோக பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து யோக பைரவர், சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை பாஸ்கர குருக்கள் செய்தார். ஏராளமான பெண்கள் ஸ்ரீ யோக பைரவர் சன்னதி முன்பு வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம், மண் அகல் விளக்குகள் ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா appeared first on Dinakaran.

Tags : Theipirai Ashtami festival ,Tirutalinathar temple ,Tiruputhur ,Tiruputhur Tirutalinathar temple ,Tiruputhur Sivagami Ambal Sametha ,Tirutalinathar ,Sri Yoga Bhairava temple ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா