×

கரூர்- திருச்சி சாலை தெரசா கார்னர் நான்கு சக்கரவாகனத்தால் போக்குவரத்து நெரிசல்

கரூர், ஜன. 22: கரூர் பகுதியில் இருந்து திருச்சி, குளித்தலை, மணப்பாறை, தரகம்பட்டி, புலியூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், மற்ற வாகனங்களும் சுங்ககேட், கருப்பக்கவுண்டன்புது£ர், தெரசா கார்னர் வழியாக காந்திகிராமத்தை தாண்டி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும், சில அரசு நிறுவனங்களும் உள்ளன.குறிப்பாக தெரசா கார்னர் பகுதியில் மூன்று வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கரூர் பகுதியில் இருந்தும், காந்திகிராமம் போன்ற பகுதிகளில் இருந்தும், ராமானூர், கொளந்தானூர், அரசு மருத்துவக் கல்லூரி, பசுபதிபாளையம், ஐந்து ரோடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைவரும் தெரசா கார்னர் பகுதியில் உள்ள பிரிவுச் சாலையில் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், தெரசா கார்னர் பகுதியை ஒட்டியுள்ள கருப்பக்கவுண்டன்புதூர் பிரிவு சாலை அருகே நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. காந்திகிராமம் போன்ற பகுதிகளில இருந்து தெரசா கார்னர் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியை தாண்டி செல்லும் வாகனங்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதுடன் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, தெரசா கார்னர் பகுதியை ஒட்டி சாலையோரம் வாகன நிறுத்தத்தை சீரமைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

The post கரூர்- திருச்சி சாலை தெரசா கார்னர் நான்கு சக்கரவாகனத்தால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Karur-Trichy road Teresa Corner ,Karur ,Trichy ,Kulithalai ,Manapparai ,Taragampatti ,Puliyur ,Sungagate ,Karupakkoundanputhur ,Teresa Corner ,Gandhigram.… ,Karur-Trichy road ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...