- களக்காடு ஒன்றியம் கலுங்கடி
- நெல்லை
- நாங்குநேரி
- சட்டமன்ற உறுப்பினர்
- ரூபி மனோகரன்
- களக்காடு ஒன்றியம்
- கலுங்கடி
- தின மலர்
நெல்லை, ஜன.22: களக்காடு யூனியன் கலுங்கடியில் ரூபாய் 13.90 லட்சத்தில் தரைத் தள நீர்த்தேக்க தொட்டி அமைக்க நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார். களக்காடு யூனியன் கலுங்கடியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13.90 லட்சம் மதிப்பீட்டில் தரை தள நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து சூரங்குடி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நாங்குநேரி – களக்காடு நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
நிகழ்வில் களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் ஒபேத், களக்காடு மத்திய வட்டார தலைவர் காலப்பெருமாள், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், சூரங்குடி பஞ்சாயத்து தலைவர் மலர் ஞானம் சிரோன்மணி, கிளார்க் கன்னித்துரை, களக்காடு வட்டார செயல் தலைவர் ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post களக்காடு யூனியன் கலுங்கடியில் ₹13.90 லட்சத்தில் தரைத்தள நீர்த்தேக்க தொட்டி appeared first on Dinakaran.
