- காஞ்சி சங்கரா கல்லூரி
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் சங்கர கல்லூரி
- காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தின மலர்
காஞ்சிபுரம், ஜன.22: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடந்த நேர்முக தேர்வில் பங்கேற்று தேர்வான, இறுதியாண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணையினை கல்லூரி முதல்வர் வழங்கினார். காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன், ஒரு பகுதியாக சென்னை இசட் எப் ரானே குடியிருப்போர் பாதுகாப்பு அமைப்புகள் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நேர்முக தேர்வு நடத்தியது.
அதில் கல்லூரியை சேர்ந்த பிபிஏ, பிகாம் மற்றும் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி போன்ற துறையை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், முடிவாக 14 மாணவர்களை நிறுவனம் தேர்வு செய்தது.இவ்வாறு, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு, பணி நியமன ஆணையினை கல்லூரி முதல்வர் கலை இராம.வெங்கடேசன் வழங்கினார்.
இதேபோல், ஆதித்யா போர்ஸ் என்ற நிறுவனம் நேர்முக தேர்வை நடத்தியது. அதில் பிபிஏ இறுதியாண்டை சேர்ந்த 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் பணி ஆணையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர், பேராசிரியைகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கிராமப்புற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post காஞ்சி சங்கரா கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை: கல்லூரி முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.
