×

நெருப்பு மூட்டி குளிர் காய்ந்ததில் கடலூர் டிரைவர்கள் பரிதாப பலி: குவைத்தில் சோகம்

கடலூர்: குவைத் நாட்டில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்ததில் கடலூரை சேர்ந்த 2 டிரைவர்கள் உட்பட 3 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் முஹம்மது ஜூனைத் (45), முஹம்மது யாசின்(30). இருவரும் குவைத் நாட்டில் டிரைவராக இருந்தனர். இதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த கவுஸ் பாஷா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் என 4 பேரும் சேர்ந்து, குவைத் நாட்டில் வேலை நிமித்தமாக பாலைவனப் பகுதியில் கடந்த 18ம் தேதி ஒரு தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்தனர்.

அங்கு, தற்போது கடுமையான குளிர் நிலவி வருவதால், குளிர் காய்வதற்காக அடுப்புக்கரியை பயன்படுத்தி நெருப்பு மூட்டி விட்டு, கதவுகளை அடைத்து விட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு முஹம்மது ஜூனைது, முஹம்மது யாசின் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் என மூவரும் தூக்கத்திலேயே இறந்து விட்டனர். இவர்களுடன் தங்கி இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கவுஸ் பாஷா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

The post நெருப்பு மூட்டி குளிர் காய்ந்ததில் கடலூர் டிரைவர்கள் பரிதாப பலி: குவைத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kuwait ,Muhammad Junaid ,Muhammad Yasin ,Mangalampet ,Kuwait.… ,Dinakaran ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...