×

காலிறுதியில் தோல்வி: இந்தியாவுக்கு ஏமாற்றம்

நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, சீன வீராங்கனை சுவாய் ஸாங் இணை, ஆஸ்திரேலியா வீரர் ஜான் பியர்ஸ், வீராங்கனை ஒலிவியா கடெக்கி இணையுடன் மோதியது. முதல் இரு செட்கள் ஆளுக்கு ஒன்றாக கிடைத்ததால் டை பிரேக்கர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, 6-2, 4-6, 9-11 என்ற செட் கணக்கில் போபண்ணா இணை தோல்வியை தழுவி வெளியேறியது.

ஆஸி ஓபனில் களமிறங்கிய இந்திய வீரர்கள் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி, ராம் பாலாஜி உள்ளிட்டோர் வெவ்வேறு கட்டத்தில் ஏற்கனவே தோற்று வெளியேறினர். தற்போது போபண்ணாவும் தோல்வி அடைந்துள்ளதால், இந்தியாவின் ஆஸி ஓபன் கனவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post காலிறுதியில் தோல்வி: இந்தியாவுக்கு ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : India ,Bopanna ,Suai Zhang ,John Peers ,Olivia Kateki ,Dinakaran ,
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும்...