×

பயணிகள் கவனத்திற்கு.. இனி மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அதிவேக பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது. சென்னையில் மக்களின் பயணத்தை எளிமையாக்கவும், விரைவாக்கவும் பல்வேறு போக்குவரத்து திட்டம் உள்ளது. அதில் முக்கியமானது மெட்ரோ ரயில் திட்டம். இந்தத் திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்வதற்கு சில விதிகளும் உள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்; மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல். இனி சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. மேலும் அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

The post பயணிகள் கவனத்திற்கு.. இனி மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Metro Administration ,Chennai ,Metro Rail Administration ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி